தமிழ் மக்கள் கூட்டணி பாராளுமன்றத் தேர்தலில் மான் சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக தெரிவிப்பு

3 months ago


தமிழ் மக்கள் கூட்டணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தனது மான் சின்னத்தில் தனித்துப்    போட்டியிடுவது என்று நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் கூடிய அந்தக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.

அத்துடன், அந்தக் கட்சியைச் சேர்ந்த க. அருந்தவபாலனை யாழ். மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக களமிறக்கவும் நேற்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர்                                க. வி. விக்னேஸ்வரன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில்,

தமிழ் மக்கள் கூட்டணி ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியுடனோ அல்லது இலங்கை தமிழரசுக்      கட்சியுடனோ இணைந்து போட்டியிடுவதில்லை. தனித்து கட்சியின் மான் சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், கட்சித் தலைவரான          க. வி. விக்னேஸ்வரன் தேர்தலில் போட்டியிடாததால், முதன்மை வேட்பாளராக ௧. அருந்தவபாலனை நிறுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பில் அவருடன் பேசி இணக்கம் காணவும் முடிவு எட்டப்பட்டது.

மேலும், கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதால் கிழக்கு          மாகாணத்தில் தமிழர்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாது போகும் வாய்ப்புள்ளது.

எனவே, கிழக்கில் மட்டும் கூட்டணியாக அல்லது வேறு கட்சிகளுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பிலும் பேசப்பட்டது.




அண்மைய பதிவுகள்