விசேட நடவடிக்கையில் பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிகளை பறிமுதல் செய்க - பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை

6 months ago

எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் இரண்டு மாதகால விசேட நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்து பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிகளை பறிமுதல் செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு அவர்களிடம் உள்ள துப்பாக்கிகள் தடையாக உள்ளன.

இதனால், முப்படையினரின் ஆதரவுடன் இந்த விசேட நடவடிக்கை அமுல்படுத்தப்பட உள்ளது.

எவ்வாறாயினும், நாட்டில் தொடர்ந்தும் 'யுக்திய' நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யுக்திய' நடவடிக்கையால் நாட்டில் குற்றச்செயல்கள் 23 வீதத்தால் குறைந்துள்ளது.

இவ்வருட இறுதிக்குள் குற்றச் செயல்கள் 50 வீதத்தால் குறையும் என எதிர்பார்ப்பதாகவும் கடந்த ஆறு மாதங்களுக்குள் 5,000 போதைப்பொருள் வியாபாரிகள் 'யுக்திய' நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டனர் என பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


அண்மைய பதிவுகள்