மியன்மார் ரோகிங்கியா அகதிகளில் இருவர் சுகயீனம் உற்ற நிலையில் முல்லைத்தீவு மருத்துவமனையில் சேர்ப்பு

5 hours ago



முல்லைத்தீவு - கேப்பாபிலவு விமானப்படைத் தளத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தங்கவைக்கப்பட்டுள்ள 115 மியன்மார் ரோகிங்கியா அகதிகளில் இருவர் உடல் சுகயீனம் உற்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நேற்று அதிகாலைவேளை குறித்த அகதிகளில் இருவருக்கு வயிற்றுவலி காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

33 அகவையுடைய பெண் ஒருவரும் 12 அகவையுடைய சிறுவன் ஒருவருமே இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அண்மைய பதிவுகள்