இலங்கையில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜப்பான் அரசு 300 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கியது
4 months ago

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜப்பான் அரசாங்கம் சுமார் 300 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிப் பொருட்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகம் மற்றும் ஜய்கா நிறுவனத்தின் பங்கேற்புடன் வழங்கப்பட்ட உதவிப் பொருட்களை ஏற்றிவந்த விசேட சரக்கு விமானம் நேற்று (07) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாகவும், அங்கு அவை இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அண்மையில் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலர்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
இதனிடையே, மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களுக்கு இந்திய அரசும் ஏராளமான உதவிப் பொருட்களை வழங்கியுள்ளன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
