நீதிமன்றால் பிணையில் செல்ல அனுமதித்த பாதாள தலைவர்கள் கடல் வழியாக தப்பினரா? பாதுகாப்பு தரப்பு தேடுதாம்

2 weeks ago



நாட்டின் முன்னணி போதைப்பொருள் வியாபாரிகளில் ஒருவராகக் கூறப்படும் 'குடு சலிந்து' மற்றும் அண்மையில் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்ட பாதாள உலகக் கும்பலின் தலைவன் 'பொடி லஸ்ஸி' ஆகியோர் இரகசியமாக நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் சந்தேகிக்கின்றனர்.

நாடு. இந்த இரண்டு குற்றவாளிகளும் கடல் வழியாக வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற பெரும் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் கூறுகின்றனர்.

பாணந்துறை மேல் நீதிமன்றம் குடுசலிந்துவுக்கு பிணை வழங்கியதுடன், ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 9 தொடக்கம் 12 மணிக்குள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளது.

குடு சாலிந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவிருந்த போதிலும், அவர் அன்றைய தினம் முன்னிலையாகவில்லை என பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடு சலிந்து பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து, அன்றிரவு (அதாவது 20ஆம் திகதி இரவு) பாணந்துறையில் உள்ள அவரது வீட்டில் பெரும் விருந்து நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது.

அந்த விருந்துக்காக போதைப்பொருள் வியாபாரிகள், பாதாள உலக குண்டர்கள் உட்பட பெருமளவிலானோர் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருந்து நடைபெற்றபோது சலிந்து ஏற்கனவே நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தென்னிலங்கை பாதாள உலகின் மிக மோசமான குற்றவாளிகளில் ஒருவராகக் கூறப்படும் பொடி லெசி கடந்த 9ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

பிணையில் விடுவிக்கப்பட்ட பொடி லெசி, சொகுசு கார்களில் ஊர்வலமாக கொழும்பு பகுதிக்குச் சென்றுள்ளார்.

அதன்பிறகு பொடி லெசி குறித்து எந்த தகவலும் வரவில்லை என பாதுகாப்பு படையினர் கூறுகின்றனர்.

ரத்கம உள்ளுாராட்சி மன்றத் தலைவர் மனோஜ் மென்டிஸ் சுட்டுக் கொல்லப் பட்டமை உட்பட தெற்கில் இடம்பெற்ற பல கொலைகளுக்காக பொடி லெசி மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களான ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோர் மார்ச் 15, 2023 அன்று மடகாஸ்கரில் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், இந்த இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களும் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.

போதைப் பொருள் வியாபாரியான ஹரக் கட்டா தற்போது தங்காலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் கடுமையான குற்றவாளியாக இருந்த கஞ்சிபானி இம்ரான், முன்னதாக நீதிமன்றத்தில் பிணை பெற்று கடல் மார்க்கமாக நாட்டை விட்டு தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்