யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 350 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்கான் இயந்திரம் கையளிப்பு

5 months ago


யாழ். போதனா வைத்தியசாலை, யாழ், மருத்துவபீடம். சிவபூமி அறக்கட்டளை, இணைந்து நடத்தும் பெண்கள் தொடர்பான கருவளச் சிகிச்சை நிலையத்திற்கு கொடையாளர் சதா.மங்களேஸ்வரன், கலாநிதி ஆறு.திருமுருகனின் வேண்டு கோளுக்கு இணங்க (அபயம் அறக்கட்டளை ஊடாக) வழங்கிய 350 லட்சம் ரூபா பெறுமதியான ஸ்கான் இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது.

சிவபூமி அறக்கட்டளைத் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகனால் மேற்படி ஸ்கான் இயந்திரம் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி மற்றும் யாழ்.மருத்துவ பீட மகப்பேற்று வைத்திய நிபுணர்கள், தாதியர்க ளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், யாழ். போதனா வைத்தியசாலை, யாழ்.மருத்துவ பீடம், வைத்தியர்கள், சிவபூமி அறக்கட்டளை நிலைய கொடையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அண்மைய பதிவுகள்