காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து துன்புறுத்துவதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.

4 months ago


பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங் களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து துன்புறுத்துவதாக சர்வ தேச மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளதாவது -

பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு, மிரட்டல், பொய்யான குற்றச்சாட்டுகள், வன்முறை மற்றும் தன்னிச்சையான கைதுகள் மூலம் குடும்பங்களை தொடர்ந்து துன்புறுத்துகின்றனர். காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் அன்றாட வேதனையை அனுபவிக் கிறார்கள். இதற்கு காரணமான அரச அமைப்புகள் அவர்களை மௌனமாக்க முயற்சி செய்கின்றன என்று மனித உரிமைகள் கண் காணிப்பகத்தின் ஆசியாவுக்கான துணை இயக்குநர் மீனாட்சி கங் குலி கூறினார்.

பலர் நீதியைப் பார்க்க அவர்கள் வாழ மாட்டார்கள் என்ற அச்சத்தை வெளிப்படுத்துகிறார்கள் என அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்- உலகில் அதிகளவானவர்கள் பலவந்தமாக காணாமலாக்கப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. இலங்கை அதிகாரிகள் பல தசாப்தங்களாக காணாமல் ஆக்கப் பட்டவர்களின் தலைவிதியை வெளிப்படுத்தவோ அல்லது அதற்குப் பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடரவோ மறுத்து வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான தாய்மார்கள் மனைவிகள் மற்றும் பலர் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமலேயே இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் சர்வதேச விசாரணைகளுக்கு வேண்டுகோள் விடுக்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், குறிப்பாக பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் செயற்படுபவர்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவது, அச்சுறுத் தப்படுவது துன்புறுத்தப்படுவது நீடிக்கிறது.

ஐக்கிய நாடுகளுடன், இராஜ தந்திரிகள் உட்பட சர்வதேச செயற் பாட்டாளர்களுடன் ஈடுபாட்டை கொண்டுள்ள காணாமல்போனவர் களின் உறவினர்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவது, அச்சுறுத் தப்படுவது, துன்புறுத்தப்படுவது நடந்துகொண்டுதான் இருக்கிறது- என்றார்.