யாழ்.காரைநகர் - காசூரினா கடலில் நீராடிய அறுவர் விசப்பாசி தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்ப்பு

யாழ்.காரைநகர் - காசூரினா கடலில் நீராடிய அறுவர் விசப்பாசி தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கசூரினா சுற்றுலா மையமானது காரைநகர் பிரதேச சபையின் ஆளுகைக்குள் காணப்படுவதால் இது குறித்து காரைநகர் பிரதேச சபையின் செயலாளரை தொடர்பு கொண்டு வினவியவேளை,
நேற்று விசப்பாசி தாக்கி ஆறு பேர் காரைநகர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் நான் காரைநகர் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிக்கு இது குறித்து தெரியப்படுத்தினேன்.
அந்த வகையில் விசப்பாசியை ஒழிப்பதற்கு வினா கிரி வாங்கி தருமாறு கோரிய நிலையில் நான் அதனை வாங்கிக் கொடுத்தேன்.
கடந்த நாட்களில் இவ்வாறான தாக்கம் எவையும் இடம்பெறவில்லை.
திடீரென இன்றைய தினமே (நேற்று) இந்த விசப்பாசி தாக்கம் இடம்பெற்றுள்ளது- என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
