மெட்டா நிறுவனம் மீண்டும் பெரிய அளவில் பணி நீக்கம் செய்யத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன

2 months ago



மெட்டா நிறுவனம் மீண்டும் பெரிய அளவில் பணி நீக்கம் செய்யத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி மார்க் சக்கர்பர்க் தலைமையிலான அந்நிறுவனம் அடுத்த வாரம் 3,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்யத் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிறுவனம் சமீபத்தில் குறைந்த செயல்திறன் கொண்டவர்களில் 5 சதவீதமான ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.

இது தொடர்பில் வெளியான அறிக்கையின்படி, அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பணிநீக்க செயல்முறையை தொடங்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் பணிநீக்கங்கள் இருக்காது என்று கூறப்படுகிறது.

பணிநீக்கங்கள் இருந்த போதிலும், மெட்டா நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய செய்திக் குறிப்பில் இயந்திர கற்றல் பொறியாளர்களை பணியமர்த்தும் செயல் முறையை விரைவுபடுத்தப் போவதாகக் கூறியுள்ளது.