மழை, வெள்ள அனர்த்தம் காரணமாக யாழ். தென்மராட்சி பிரதேசத்தில், இடம்பெயர்ந்த மக்கள் 20 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
415 குடும்பங்களைச் சேர்ந்த 1,477 பேர் இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வீடுகளுக்குள் வெள்ளம் நிறைந்துள்ளதால் அவற்றை வெளியேற்றும் நடவடிக்கையில் சாவகச்சேரி பிரதேச செயலகம், சாவகச்சேரி பிரதேச சபை ஆகியவற்றுடன் இணைந்து இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.