இமாலயப் பிரகடனம் தேசிய உரையாடலாக முன்னெடுக்க இயக்கம் ஒன்றை உருவாக்கி ஒப்படையுங்கள்.--மாவட்ட மட்ட உரையாடலில் வலியுறுத்து.

3 weeks ago



இமாலயப் பிரகடனத்தினை தொடர்ந்தும் தேசிய உரையாடலாக முன்னெடுத்துச் செல்வதற்கான பணியை மக்கள் இயக்கமொன்றை உடனடியாக உருவாக்கி ஒப்படையுங்கள் என்று யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட மட்டத்திலான உரையாடல்களில் ஆணித்தரமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் சமாதானம் மற்றும் நல்லிணகத்தை நோக்கிய இமாலயப் பிரகடனம் பற்றிய உரையால் கடந்த 16ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்தது.

இதன்போது பௌத்த, இந்து, காத்தோலிக்க, இஸ்லாமிய சமயத் தலைவர்கள் மற்றும் பல்லின சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், இளையோர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிகழ்வின் போது, இமாலயப் பிரகடனம் தேசிய மட்டத்தில் உரையாடப்பட வேண்டிய தக்க தருணம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே தேசிய கலந்துரையாடலொன்றை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்பதை பங்கேற்பாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.

அத்துடன், இமாலயப் பிரகடனத்தினைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அளப்பரிய பணியை பௌத்த அமைப்புக்கள், உலகத் தமிழர் பேரவை உட்பட வரையறுக்கப்பட்ட சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றுக்குள் மட்டுப்படுத்தக்கூடாது என்றும் பங்கேற்பாளர்கள் கேட்டுக்கொண்டனர்.

மேலும், இமாலயப் பிரகடனத்தினை தேசிய மட்டத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கான மக்கள் இயக்கமொன்றை உடன் உருவாக்குவதோடு தேசிய உரையாடலை முன்னெடுத்துச் செல்லும் பணியை அந்த மக்கள் இயக்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பங்கேற்பாளர்கள் ஆணித்தரமாக வலியுறுத்தி கோரியுள்ளனமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்