தமிழ் தேசியத்திற்கு துரோகம் இழைத்தது உண்மை என்று மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அதிவண. ஜோசப் பொன்னையா ஆண்டகை தெரிவிப்பு.

4 months ago


புலிகளுக்கு எதிராக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தமிழ் தேசியத்திற்கு துரோகம் இழைத்தது உண்மை என்று மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அதிவண. ஜோசப் பொன்னையா ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:-

தமிழரசுக் கட்சி அன்றும் இன்றும் ஜனநாயக மரபுகளைப் பேணி பாதுகாத்து வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர் சுமந்தி ரன் இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் சந்தோஷ் 'இலங்கை தமிழரின் பிரச்சினைகள்' தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாடலுக்கான தொடர்பை தூதுவர் சந்தோஷ் ஏற்படுத்தினாரா அல்லது சுமந் திரன் ஏற்படுத்தினாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தமிழ் தேசிய பிரச்சினையை ஒரு பலம் மிக்க நாட்டின் ராஜதந்திரியோடு தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சுமந்திரன் தன்னந்தனியாகச் சென்று கலந்து பேசுவதற்கு அக்கட்சி அனுமதி கொடுத்ததா? கட்சியின் அனுமதி இன்றி தன்னந்தனியாக இவ்வாறான ஆழமான பிரச்சினையை ஒரு ராஜதந்திரியோடு பேசுவது ஒரு வெளிப்படைத் தன்மை அற்ற நிலையைக் காட்டுகிறது. இது பாரிய தவறு, மக்கள் சந்தேகப்படுகி றார்கள்.

சுமந்திரன் கடந்த காலங்களிலும் தமிழ் தேசியத்துக்கு துரோகம் இழைத்துள்ளதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அவருடைய துரோகம் ஐக்கிய நாடுகள் சபை வரை சென்றிருக்கிறது. புலிகளுக்கு எதிராக போர் குற்ற விசாரணை வேண்டுமென்று முன்மொழிந்தவர் சுமந்திரன். இது பாரிய தவறு. அதுமட்டுமின்றி தந்தை செல்வாவினால் விதைக்கப்பட்ட 'சமஷ்டி கோரிக்கையை' தூக்கி எறிந்து விட்டு புதிய அரசியலமைப்புக்குள் 'ஏக்கிய ராஜ்யத்தை' புகுத்த நினைத்தவர் சுமந்திரன். இது எவ்வளவு பாரிய தவறு. இதையே மக்கள் முன்வைக்கிறார்கள். அது மட்டுமன்றி மறைந்த தலைவர் சம்பந்தனுக்கு எதிராக அவரது கட் சியிலிருந்து கொண்டு அவருக்கு எதிரான கருத்துகளை திருமலையில் விதைத்தவர். இதை மக்கள் என்னிடம் சொல்கிறார்கள். இது பாரிய தவறல்லவா? ஒரு உட்கட்சி போராட்டத்தை திறந்த வெளியில் பேசுவது நாகரிகமா? அவர் ஏற்படுத்திய குற்றச்சாட்டுக ளில் ஒன்று 'காணாமல் ஆக்கப்பட்டவர்கள்', 'வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்' என்று இருவகைப்படும். ஐக்கிய நாடுகள் சபையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு யார் பொறுப்பு கூறுவது என்ற கருத்தை அவர் முன்வைக்க தவறிவிட்டார்.

தனது சொந்தக் கட்சிக்கு எதிராகவே அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து அக்கட்சியின் பெயரை மழுங்கடித்தார். இவ்வாறு எத்தனையோ அவரது குறைகளைச் சொல்லிக் கொண்டே இருக்கலாம். இவை எல்லாம் எனக்கு மக்களால் தெளிவுபடுத்தப்பட்ட உண் மைகள்.தமிழ் தேசிய பகுதியிலுள்ள ஒரு மதத்தின் தலைவர் என்ற வகை யில் இவைகளை நான் வெளிக்கொணர வேண்டியவனாக இருக்கிறேன். தவறு யாருடையதோ அதை சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. ஆதலால் சுட்டிக்காட்டுகிறேன்.

சுமந்திரன் போன்றவர்கள் தமிழ் மக் களின் காவலாக இருக்கும் தமிழரசுக் கட்சியை புதைகுழிக்குள் தள்ளி விடுவார்கள் போல் தெரிகிறது. இதை விட தமிழரசுக் கட்சியின் தலைவர் ஒரு சோம்பேறியாக இருப்பது எனக்குத் தெரி

கிறது. அவர் துடித்தெழுந்து பணியாற்ற வேண்டும் என்றார்.