யாழ்.தென்மராட்சி வரணி சிட்டி வேரம் அம்மன் ஆலயத்தின் உண்டியலை திருடிக்கொண்டு தப்பிக்க முயன்றவர் கைது

2 months ago



யாழ்.தென்மராட்சி வரணி சிட்டி வேரம் கண்ணகை அம்மன் ஆலயத்தில் இருந்த உண்டியலை திருடிக்கொண்டு தப்பிக்க முயன்றவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றது.

சம்பவ தினத்தன்று மாலை 5.30 மணிக்கு காவலாளிகள் ஆலய பாதுகாப்பை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் மாலை 6 மணியளவில் நபர் ஒருவர் தனக்கு பசிப்பதாகவும் சாப்பாடு இருந்தால் தாருங்கள் என்று காவலாளிகளை கேட்டுள்ளார்.

இதையடுத்து காவலாளிகள் ஆலயத்தில் இருந்த வாழைப்பழத்தை வழங்கியுள்ளனர்.

அதேவேளை குறித்த நபர் மீது சந்தேகம் கொண்ட காவலாளிகள் ஆலயச் சூழலை மிகுந்த அவதானத்துடன் கவனித்து வந்துள்ளனர்.

இந்த நிலையிலேயே இரவு 9 மணியளவில் ஆலய வாசலில் இருந்து நபர் ஒருவர் உண்டியலை திருடிக்கொண்டு கோவிலின் பின் பகுதிக்கு தப்பியோடியதை அவதானித்துள்ளனர்.

இதையடுத்து விரைந்து செயல்பட்ட காவலாளிகள் உடனடியாக குறித்த திருடனை உண்டியலுடன்  மடக்கிப்பிடித்து ஆலய நிர்வாகத்தினருக்கும் ஊர் இளைஞர்களுக்கும் விடயத்தை தெரியப்படுத்தியிருந்தனர்.

இதையடுத்து குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸாருக்கு                         அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



அண்மைய பதிவுகள்