மன்னாரில் மோட்டார் சைக்கிள் - துவிச்சக்கர வண்டி விபத்தில் சிக்கிய முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
6 months ago

மன்னார் பேசாலை பகுதியைச் சேர்ந்த துரைச்சாமி கணபதி (வயது-74) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இவர் கடந்த 2ஆம் திகதி பேசாலை - மன்னார் வீதியால் தனது வீட்டை நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தார்.
இதன் போது எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்து சம்பவித்தது.
இந்த நிலையில் அவர் மன்னார் - பேசாலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மன்னார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட் டார்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
