யாழில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

2 months ago



நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் தெற்கு, வீரபத்திரர் கோயில் வீதியைச் சேர்ந்த காந்தீபன் சுதர்ஷினி (வயது 44) என்று குடும்பப் பெண்ணை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கணவனை பிரிந்து வாழ்ந்து வருவதுடன், யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியிலும் ஊழியராக கடமை புரிந்து வருகின்றார்.

இந் நிலையில் தனக்கு காய்ச்சல் என தெரிவித்த பெண் கடந்த 11ஆம் திகதி வீடு திரும்பியுள்ளார்.

அவர் நேற்று வீட்டில் இருந்து       சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின்போது நிமோனியா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அவர் இறந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண     விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அண்மைய பதிவுகள்