கடந்த 20 ஆண் டுகளில் 6 ஆயிரம் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். 500 மீனவர்கள் உயிரிழந்தனர். தற்போதும் இலங்கை கடற்படை தாக்குதல் அதிகரித்துள்ளது-
4 months ago
கடந்த 20 ஆண்டுகளில் இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களால் இதுவரை 500 தமிழக மீனவர்கள் உயிரிழந்தனர் என்று ம. தி. மு. க. பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்தார்.
நாடு முழுவதும் போதைப் பொருள் கலாசாரம் அதிகரித்துள்ளது. இதை மத்திய அரசு தடுக்கத் தவறிவிட்டது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
பரமக்குடியில் நடந்த செய் தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, கடந்த 40 ஆண்டுகளாக தமிழக மீனவர்களை தாக்குவதும், அவர் களை கடத்திச் சென்று இலங்கை சிறையில் அடைப்பதும், சிறையில் சித்திரவதை செய்வதும்,
மீனவர்களின் வலை, படகு இயந் திரம், உடமைகளை பறிப்பதும் தொடர்கிறது. கடந்த 20 ஆண் டுகளில் 6 ஆயிரம் மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். 500 மீனவர்கள் உயிரிழந்தனர். தற்போது இலங்கை கடற்படை தாக்குதல் அதிகரித்துள்ளது- என்றார்.