நேட்டோ இலக்கை அடைவதற்கான திட்டத்தை கனடா அறிவிக்கவுள்ளது

5 months ago



நேட்டோ இலக்கை அடைவதற்கான திட்டத்தை அமெரிக்காவில் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டில் கனடா அறிவிக்க உள்ளதாக தெரியவருகிறது.

இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றுள்ளார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவழிக்கும் நேட்டோ இலக்கை எட்டாதமை குறித்த கனடிய அரசாங்கம் விமர்சனங்களை எதிர்கொண்டுள் ளது.

இந்த நிலையில் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதத்தை பாதுகாப்புக்காகச் செலவழிக்கும் முடிவை கனடா வியாழக்கிழமை அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல மாதங்கள் இந்த விடயத்தில் அழுத்தத்தை எதிர்கொண்ட பின்னர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக சிரேஷ்ட அரசாங்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதம் என்ற இலக்கை அடைய பொது காலக்கெடு இல்லாத நாடாக கனடா மட்டும் நேட்டோவில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

2030 ஆம் ஆண்டுக்குள். கனடா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.76 சதவீதத்தை இராணுவத்திற்காக செலவிடும் என தேசிய பாதுகாப்புத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப் பிடத்தக்கது.


அண்மைய பதிவுகள்