கனடாவில் வாகன திருட்டு தொடர்பில் தமிழ் இளைஞன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 months ago



கனடாவில் வாகன திருட்டு தொடர்பில் தமிழ் இளைஞன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் நோர்த் யோர்க்கைச் சேர்ந்த 22 வயதான யோகேஷ்குமார், 22 வயதான அஜ் பிரீத் சிங், 23 வயதான கலிடானைச் சேர்ந்த 25 வயதான அம்ரித்பால்சிங், 23 வயதான சுமித் சுமித் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கும்பல் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலிடோ பகுதியிலிருந்து திருடப்பட்ட வாகனம் ஒன்று ஒன்ராறியோவுக்குள் பிரவேசித்த வேளையில் அது திருடப்பட்ட வாகனம் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த நிலையில், 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மைய பதிவுகள்