இலங்கையில் ஊழலை கையாள்வதற்கு தலைவர்கள் இல்லை என ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவிப்பு..
7 months ago

இலங்கையில் ஊழலை உண் மையாக கையாள்வதற்கு தலை வர்கள் எவரும் தயாராக இல்லை என ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித் துள்ளார்.
இலங்கை அமைச்சர் ஒருவர் இலஞ்சம் கோரினார் என ஜப்பான் குற்றம் சாட்டியதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் இருந்தபோது, ஜப்பானிடம் குறித்த அமைச்சர் இலஞ்சம் கோரியதாக விஜயதாச ராஜபக்ஸ, தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே கோட்டாபய ராஜபக்ச, குறித்த அமைச்சரை பதவி நீக்கியதாகவும் அவர் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ர மசிங்கவின் அமைச்சரவையில் அமைச்சராக இருப்பதாகவும் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
1977ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் ஊழலை உண்மை யாக கையாள்வதற்கு தலைவர்கள் எவரும் தயாராக இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
