கிளிநொச்சியில் மதுபான நிலையங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு குழு நியமிக்கத் தீர்மானம்

1 week ago



கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களுக்கு இடையூறாக அதிகளவில் திறக்கப்பட்டுள்ள மதுபான நிலையங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு குழுவொன்றை நியமிக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தின் நகர திட்டமிடலுக்கு இடையூறாக அதிகளவில் மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, கூட்டத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

குறித்த மதுபான நிலையங்களை உடனடியாக மூடுவதெனில் சட்டச் சிக்கல்கள் ஏற்படும்.

ஆகவே அது தொடர்பில் அறிக்கை தயாரிக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பதில் செயலர் முரளிதரன் குறிப்பிட்டார்.

அதற்கமைய குழுவொன்றை நியமித்து ஒவ்வொரு மதுபான நிலையத்தின் அமைவிடம், பொதுமக்களின் மனநிலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் ஜனவரி மாத இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்றும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான இ.சந்திரசேகர் அறிவுறுத்தினார்.