சீன கடலட்டைப்பண்ணை புதிய தாக்கத்தை உருவாக்கியுள்ளன - பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுட்டிக் காட்டியுள்ளார்

7 months ago

சீனா நாட்டின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகின்ற கடல் அட்டைப்பண்ணைகள் புதிய புதிய தாக்கங்களை உருவாக்கியுள்ளன.

இது வருமானம் கூடிய துறையாக இருப்பினும் கடற்றொழில் துறையிலே மிகப்பெரிய தாக்கத்ததை ஏற்படுத்துகின்றது என தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுட்டிக் காட்டியுள்ளார்.

சுவிற்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் தமிழர் பொருளாதார மாநாடொன்றில் சுலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்- 

தங்களுடைய கடற்றொழில் துறையிலே புதிய கண்டுப்பிடிப்புக்களை அல்லது தேடல்களை கண்டறியாத வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்கள் மிகப் பெரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளனர்.

குறிப்பாக பருத்தித்துறையிலும் மன்னாரிலும் களமுனைகளில் உற்பத்தியாகின்ற மீனினுடைய உற்பதி முறைகளும் கூட மெல்ல மெல்ல வீழ்ச்சியடைந்து செல்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சீனா நாட்டின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகின்ற கடல் அட்டைப் பண்ணைகள் புதிய புதிய தாக்கங்களை உருவாக்கியுள்ளன.

இது வருமானம் கூடிய துறையாக இருப்பினும் கடற்றொழில் துறையிலே மிகப்பெரிய தாக்கத்ததை ஏற்படுத்துகின்றது. இது தடுக்கப்பட வேண்டும். இதனால் எமது கடற்றொழிலாளர்கள் பெரும் இடர்களை எதிர்நோக்கியுள்ளனர் என்றார்.