கோட்டாபய ராஜபக்ச செய்த தவறையே மீண்டும் அநுரகுமார மற்றும் சஜித் ஆகியோர் செய்வதாக ரணில் தெரிவிப்பு.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செய்த தவறையே மீண்டும் அநுரகுமார மற்றும் சஜித் ஆகி யோர் செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
தொம்பே பிரதேசத்தில் நடைபெற்ற 'இயலும் சிறீலங்கா' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள் ளதாவது-
இரு வருடங்களுக்கு முன்பு வரிசையில் நின்றதாலேயே இன்று பலர் இங்கு நிற்கிறீர்கள். அன்று இறப்பதற்கும் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. பிரதமர் விலகினால் எதிர்கட்சித் தலைவருக்கு இடமளிக்க வேண்டும் என்று சுமந்திரன் எம்.பி கூறினார்.
ஆனால் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளப் பயமாக இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார். சரத் பொன்சேகாவும் மறுத்தார். அனுரகுமார கேட்கவே இல்லை. ஆனால் நாட்டின் நிலை மோசமாக உள்ளதை அறிந்தே நான் ஏற்றுக்கொண்டேன்.
இப்போது என்னோடு இருப்பவர்கள் எனக்கு ஆதரவளித்தால் நான் ஏற்றுக்கொண்டேன். நாட்டை பொறுப்பேற்க விரும்பாத சஜித்தும் அனுரவும் நான் பதவியேற்பதையும் விரும்பவில்லை.
சஜித்திற்கும் வழங்கும் வாக்குகள் அனுரவுக்கு வழங்கும் வாக்குகளுக்கு சமமானவை என் பதை ஐக்கிய தேசிய கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும். அத னால் செப்ரெம்பர் 21 சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது, முதலீட்டு வலயமும் கிடைக்காது-என்றார்.