உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலாண்மை மற்றும் வளங்களுக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணை செயலாளர் ரிச்சர்ட் ஆர் வெர்மா இதனை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளிற்கு அமெரிக்காவின் அர்ப்பணிப்பை அவர் மீள வலியுறுத்தியுள்ளார்.
வலுவான விசாரணை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில் சிவில் சமூகத்தின் பங்களிப்பின் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது முதல் இலங்கை அதிகாரிகளிற்கு ஆதரவாக சட்ட விசாரணை ஆதரவினை இலங்கை வழங்கிவருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்கும் பொறுப்புக்கூறும் இலக்கை அமெரிக்கா பகிர்ந்துகொள்கின்றது, விசாரணைகள் தொடரும் இவ்வேளையில் எங்கள் இணைந்த செயற்பாடுகளில் நாங்கள் உறுதியாக உள்ளோம், என வெர்மா தெரிவித்துள்ளார்.