சிங்களவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் தமிழ் மக்கள் செயற்பட வேண்டும் என்னும் வகையில் அநுரகுமார திஸாநாயக்கவின் கருத்து அமைந்ததாக எம்.பி கஜேந்திரன் தெரிவிப்பு.
தமிழர்கள் மீது திணிக்கப்படும் பெரும்பான்மையினத்தவரின் திட்டங்கள்: கஜேந்திரனின் கடுமையான சாடல் பெரும்பான்மையினத்தவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் தமிழ் மக்கள் செயற்பட வேண்டும் என்னும் வகையில் அநுரகுமார திஸாநாயக்கவின் கருத்து அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர் , "அநுரகுமார திஸாநாயக்க முன்வைத்துள்ள கருத்து தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.
தமிழ் மக்களை அடிமையாக கருதியே அவர் பெரும்பான்மையினத்தவர்களின் விருப்பங்களுக்கு ஏற்றப்படி தமிழ் மக்கள் செயற்பட வேண்டும். தவிர, அவர்களுக்கென்று எதிர்பார்ப்புக்கள், விருப்பங்கள் இருக்க கூடாது என்பதை தான் அவர் கூறுகின்றார்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளதாவது,
ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் நேற்று (08.09.2024) பிற்பகல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் குறித்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் ஆகியோர் இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, அவர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி மக்களுக்கு தமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியிருந்தனர்.