வவுனியாவில் பெரும் காடுகளில் மேய்ச்சல் தரைக்கு உகந்த பல ஏக்கர் கணக்கான இடங்களில் இராணுவம் முகாம் அமைத்துள்ளது.

வவுனியாவில் பெரும் காடுகளில் மேய்ச்சல் தரைக்கு உகந்த பல ஏக்கர் கணக்கான இடங்களில் இராணுவம் முகாம் அமைத்துள்ளது.
ஆனால் கால்நடைகளிற்கான மேய்ச்சல் தரை அமைப்பதில் மாத்திரம் திணைக்களங்கள் அக்கறையின்றி செயற்படுவதாக வவுனியா ஒருங்கிணைப்பு குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது.
வவுனியா பிரதேச ஒருங்கிணைப்பு குழுகூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் உபாலி சமரசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது வவுனியாவில் மேய்ச்சல் தரை இல்லாமல் கால்நடை வளர்ப்பில் ஈடுப டுவோர் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.
மழை காலங்களில் அதன் நிலைமை மேலும் மோசமடைவதுடன் பால் உற்பத்தியும் பெரும் வீழ்ச்சியடையும் நிலை காணப்படுகின்றது.
இராணுவம் பெரும் காடுகளில் மேய்ச்சல் தரைக்கு உகந்த இடங்களில் பல ஏக்கர் கணக்கான காணிகளை பிடித்து முகாம் அமைத்துள்ளது.
ஆனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரை வழங்குவதற்கு அதிகாரிகள் பின்னடிக்கின்றனர் என மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர்.
குளத்தின் அலைகரைப் பகுதிகளில் மேய்ச்சல் தரை அமைப்பது தொடர்பாக ஆராயுமாறும் அரச காணிகளை அடாத்தாகப் பிடித்து வைத்திருக்கும் நபர்களிடம் இருந்து அந்த காணிகளை பறித்து மேய்ச்சல் தரை அமைப்பது தொடர்பாக பரிசீலிக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் இதன் போது தெரிவித்திருந்தார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
