யாழ்.தையிட்டி விகாரைக்கு எதிராக இன்றைய போராட்டத்துக்கு வடக்கு. கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் ஆதரவு

யாழ்.தையிட்டி விகாரைக்கு எதிராக இன்று ஆரம்பமாகும் போராட்டத்துக்கு வடக்கு. கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
யாழ். தையிட்டியில் பொதுமக்களின் காணிகளுக்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக இன்று மாலை போராட்டம் ஆரம்பமாகின்றது.
அந்த விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் தமது ஆதரவை வெளிப்படுத்தி இருக்கின்றன.
இந்நிலையில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கமும் தமது முழுமையான ஆதரவைத் தெரிவிப்பதாக சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.
“தமிழ் மக்கள் தமது ஒவ்வொரு பிரச்சினைக்கு எதிராகவும் தொடர்ந்து போராடிக் கொண்டே வருகின்றனர்.
அந்த வகையில் தமது காணியை விடுவிக்க கோரி மக்கள் பாரிய போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
ஆகையினால் இந்தப் போராட்டத்தில் கட்சி பேதங்களை விடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும், பொது அமைப்புக்களும் அணிதிரள வேண்டும்." - என்றும் அவர் அறிக்கை ஊடாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
