இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த நிலையில் ஒரு வார காலத்துக்கு பேரணி செல்ல தடை விதிப்பு
6 months ago

ஒரு வார காலத்துக்கு வாகனங்களினூடாகவோ அல்லது நடைப் பயணமாகவோ பேரணி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஜனாதிபதி தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகும் வரையிலான காலப்பகுதி மற்றும் அதன் பின்னரான காலப்பகுதி உள்ளடங்களாக ஒரு வார காலத்துக்கு இவ்வாறு பேரணி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, சட்ட ஒழுங்கை பாதுகாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும் நடைமுறையிலுள்ள சட்டங்களை மீறும் பட்சத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி சட்ட ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
