நிகழ்நிலை காப்புச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

5 months ago


2024 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவிற்கமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி உரிய திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான திருத்தங்கள் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.