தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் தனது குடும்பத்தினருடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார்.
3 months ago




தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் தனது குடும்பத்தினருடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார்.
இவர் காலி, அஹூங்கம உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டுகளிக்கவுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் தனது குடும்பத்தினருடன் முச்சக்கர வண்டியில் இலங்கையில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு செல்லவுள்ளார்.
ஜொன்டி ரோட்ஸ் தனது குடும்பத்தினருடன் முச்சக்கர வண்டியில் பயணம் செய்யும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரின் இலங்கைக்கான வருகை இலங்கையின் சுற்றுலாத்துறையை மேலும் ஊக்குவிக்கும் ஒன்றாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
