கிளிநொச்சியில் பிடியாணையில் கைது செய்யப்பட்ட நண்பனை பார்க்கச் சென்ற இரு நண்பர்கள் கசிப்புடன் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிப்பு

பிடியாணையில் கைது செய்யப்பட்ட கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகர் பகுதியைச் சேர்ந்த நண்பனை பார்க்கச் சென்ற இரு நண்பர்கள் கசிப்புடன் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
உதயநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு, கிளிநொச்சி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த நிலையில், குறித்த நபரை பொலிஸார் கைது செய் தனர்.
இவ்வாறு பிடியாணையில் கைது செய்யப்பட்ட நபரை பார்ப்பதற்காக பரந்தன் பகுதியில் இருந்து குளிர்பானத்துடன் சென்ற 19 வயதுடைய இரு இளைஞர்களை கடமையில் இருந்த பொலிஸ் பரிசோதகர் பரிசோதனைக்கு உட்படுத்திய வேளையில் நண்பனுக்காக கொண்டு சென்ற குளிர்பானத்தில் கசிப்பு கலந்திருந்தமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முட்படுத்தப்பட்டபோது ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
