இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் இந்த வருடத்தில் 89 இந்திய மீனவர்கள் 10 படகுகளுடன் கைது
2 months ago

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 89 இந்திய மீனவர்கள் 10 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னார், நெடுந்தீவு மற்றும் பருத்தித்துறை கடற்பரப்புகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவிக்கின்றது.
அத்துடன், தொடர்ச்சியாக விளக்கமறியலில் உள்ள மீனவர்களுக்கான வழக்கு விசாரணைகளை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
