கனடாவின் சில பகுதிகளில் தபால் விநியோகம் இடைநிறுத்தியதாக கனடிய தபால் திணைக்களம் அறிவிப்பு

2 months ago



கனடாவின் சில பகுதிகளில் தபால் விநியோகம் இடைநிறுத்தியதாக கனடிய தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி ஒன்றாரியோ மற்றும் கியுபெக் ஆகிய மாகாணங்களில் இவ்வாறு தபால் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிப்பொழிவு மற்றும் கடும் பனிப்புயல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும்,காலநிலை காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக, தபால்களை சேகரிப்பது மற்றும் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கனடாவில் தொடரும் பனிப்புயல் காரணமாக கனடாவில் ரொறன்ரோ பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரொறன்ரோ, பீல், ஹால்டன், யோர்க், டர்ஹம், ஹமில் டன் நயகரா, மோன் அவனியர், மற்றும் சிம்கோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.