ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்கம்.

3 months ago


ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்க தேர் தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெ றவுள்ள நிலையில், பிரசாரங்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளி ரவுடன் நிறைவடைகின்றன.

இந்நிலையில், 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் எவ்வித தேர்தல் நடவடிக்கைகளும் முன் னெடுக்கப்படாத நிலையில் சமூக ஊடகங்களில் சேறு பூசுவதை நிறுத்துவதற்காக குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள் ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைக்குழு மற்றும் சமூக ஊடக வலையமைப்பைச் சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் திட்டத்தை கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் பிரசாரம் செய்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ள போதிலும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக ஊடகக் குழுக்களுடன் கலந்தாலோசித்த பின்னர் அமை தியான காலத்தில் தேர்தல் பிரசாரம் மற்றும் அவதூறு பரப்புரைகளை நிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித் துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அண்மைய பதிவுகள்