தெல்லிப்பழையில் இயங்கிவரும் மகளிர் இல்லம் தொடர்பில் விசாரணை மேற் கொள்ளப்படவேண்டும் என தெல்லிப்பழைப் பொலிஸாரிடம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தால் நேற்று மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
மேற்படி மகளிர் இல்லத்தில் பொருத்தப் பட்ட சி.சி.ரி.வி. கமரா, மாணவிகள் குளிப்பது மற்றும் உடைமாற்றுவதைப் பதிவுசெய்கின்றது என்ற விடயம் ஆளுநர் அலுவலகம் வரையில் தெரிவிக்கப்பட்டு சர்ச்சையாகியுள்ள நிலையிலேயே, அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று கோரி இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.