இந்திய ராஜதந்திரிகள் தொடர்பில் கனடிய பொலிஸ்மா அதிபர் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்திய ராஜதந்திரிகள் தொடர்பில் கனடிய பொலிஸ்மா அதிபர் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கனடிய பொலிஸ் மா அதிபர் மைக் டுஹிம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் கனடாவில் கடமையாற்றி வந்த ஆறு இந்திய ராஜதந்திரிகள் நாடு கடத்தப்பட்டிருந்தனர்.
இவ்வாறு இந்திய ராஜதந்திரிகள் நாடு கடத்தப்பட்டதனை தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சாத்தியங்கள் குறைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தல்கள் வெகுவாக குறைந்துள்ளது என தம்மால் உறுதிப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த ராஜதந்திரிகளை நாடு கடத்தியதன் பின்னர் தெற்காசிய சமூகங்களுக்கு இருந்த அச்சுறுத்தல் குறைந்துள்ளது.
கனடாவில் கடமையாற்றி வந்த இந்திய ராஜதந்திரிகள் சிலர் மறைமுகமாக பாரதூரமான குற்றச் செயல்களுடன் தொடர்பு பட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக படுகொலைகள், கப்பம் கோரல்கள் போன்ற சம்பவங்களுடன் இவர்கள் தொடர்பு பட்டிருந்தனர் என கனடிய அரசாங்கமும் பொலிஸாரும் குற்றம் சுமத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.