தியாக தீபம் திலீபனின் 37ஆவது நினைவு தினம் வவுனியாவில் உள்ள பொங்குதமிழ் தூபியில் இடம்பெற்றது.

3 months ago


ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 37ஆவது நினைவு தினம் நேற்று வவுனியாவில் உள்ள பொங்குதமிழ் தூபியில் இடம்பெற்றது.

இதன்போது போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி கா.ஜெயவனிதாவினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திலீபனின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பொங்கு தமிழ் தூபியில் சுடரேற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.