இலங்கையில் பாடசாலை கற்றல் தொடர்பான தொடர்பாடலுக்கு சமூக தொடர்பாடல் சாதனங்களைப் பயன்படுத்த கல்வி அமைச்சு தடை
2 months ago
இலங்கையில் பாடசாலை கல்வி மற்றும் கற்றல் தொடர்பான தொடர்பாடல்களுக்கு சமூக தொடர்பாடல் (வட்ஸ் அப், மெசெஞ்சர், வைபர்) சாதனங்களைப் பயன்படுத்த கல்வி அமைச்சு தடை விதித்துள்ளது.
சமூக தொடர்பாடல் கருவிகளை மாணவர்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதகமான விளைவுகள் தொடர்பில் கவனம் செலுத்தும் அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கையை கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர வெளியிட்டுள்ளார்.
இதன்படி, பாடத் திட்டத்தை உள்ளடக்கிய தகவல் தொடர்பு குழுக்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் - என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன், மாணவர்கள் வீட்டில் செய்ய வேண்டிய பயிற்சிகள் மற்றும் பணிகள் குறித்து பாடசாலைகளிலேயே விளக்கமளிக்க வேண்டும். இவற்றுக்கு சமூகத் தொடர்பாடல் கருவிகளை பயன்படுத்தக்கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.