
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன.
பொருளாதாரம், கல்வி, ஊடகம் மற்றும் கலாசாரத்துறைகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசா நாயக்க மற்றும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்தானதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
சீனாவுக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவுக்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று பிற்பகல் சீன மக்கள் மண்டபத்தில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
