லெபனான் தலைநகரில் ஹெஸ்புல்லா அமைப்பு பயன்படுத்தும் வங்கிககளை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்


நிதிநெருக்கடியை ஏற்பட்டுத்த திட்டம்; ஹெஸ்புல்லா வங்கிகளை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதல்!
லெபனான் தலைநகரில் ஹெஸ்புல்லா அமைப்பு பயன்படுத்தும் வங்கிககளை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் உள்ள அல் ஹார்ட் அல் ஹசன் வங்கியின் கிளைகளை இஸ்ரேல் தாக்கியுள்ளது .
பெய்ரூட்டின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள வங்கி கிளைகளையும் இஸ்ரேல் தாக்கியுள்ளது.
விமான நிலையத்திற்கு அருகில் உள்ள கட்டிடமொன்றை இஸ்ரேலின் விமானங்கள் தாக்குவதையும் அந்த கட்டிடம் இடிந்து விழுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
பெய்ரூட்டின் தென்பகுதியில் பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் அல் ஹார்ட் அல் ஹசன் என்ற பெயர் பலகையுடன் காணப்படும் கட்டிடம் தீப்பிடித்து எரிவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
அல் ஹார்ட் அல் ஹசன் வங்கி அமைந்துள்ள பகுதியில் காணப்படும் ஏனைய கட்டிடங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.
அத்துடன் ,அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனையின் நோயாளிகள் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்,என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அல் ஹார்ட் அல் ஹசன் வங்கி அமைந்துள்ள பகுதிகளை தாக்கப்போவதாக இஸ்ரேலிய இராணுவம் முன்கூட்டியே எச்சரித்திருந்தது.
அதேவேளை ஹெஸ்புல்லா அமைப்பிற்கு நிதிகள் கிடைப்பதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
