யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டாரவின் தலைமையிலான குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சுழிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றினை பொலிஸார் முற்றுகையிட்டு தேடுதல் நடத்தினர்.
அதன் போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 போத்தல் கசிப்பினை பொலிஸார் மீட்டதுடன், கசிப்பினை விற்பனை செய்வதற்காக தயார்ப்படுத்தி வைத்திருந்த குற்றச்சாட்டில் வீட்டில் இருந்த 47 வயதான பெண்ணையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணையும் , மீட்கப்பட்ட கசிப்பினையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக வட்டுக்கோட்டை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அசுதேவேளை குறித்த பெண் ஏற்கனவே கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தில் கைதாகி நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
