தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டின மீனவ உறவினர்கள் போராட்டம்.

4 months ago


தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் 14 கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களது இயந்திர படகுகளை பறிமுதல் செய்ததை கண்டித்து அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இன்று (08) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த 14 பேரும் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

தினமும் தங்கள் சகோதரர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதால், மக்கள் இப்போது கடற்றொழிலில் ஈடுபடவும், தங்கள் வழக்கமான வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்காகவும் கடலுக்குச் செல்வதற்கு அச்சம் வெளியிடுவதாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாங்கள், எதிர்கொள்ளும் மோசமான நிலையைக் கண்டு மாநில மற்றும் மத்திய அரசுகள் கண்ணை மூடிக்கொண்டிருக்கின்றன என்றும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.