யாழ்.பருத்தித்துறை - கற்கோவளம் முகாமிலிருந்து இராணுவத்தை வெளியேற ஜனாதிபதி உத்தரவு
வடபகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினரை உடனடியாக வெளியேறுமாறு இராணுவத் தலைமையகத்தால் நேற்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அமைச்சரவை பொறுப் பேற்று சில மணிநேரத்தில் இந்த அதிரடி உத்தரவை இராணுவத் தலைமையகம் விடுத்துள்ளது.
இதன்படி, நேற்றிலிருந்து எதிர்வரும் 14 நாட்களுக்குள் குறித்த இரா ணுவ முகாம் அமைந்துள்ள காணியில் இருந்து வெளியேறுமாறு இராணுவத் தலைமையகத்தால் இராணுவத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பருத்தித்துறை - கற்கோவளம் இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு மக்களும், தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் கடந்த காலங்களில் பல கவனவீர்ப்புப் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.
குறித்த காணியை ஆக்கிரமிக்கும் வகையில் நில அளவீடு செய்வதற்குப் பல தடவைகள் முயற்சிகள் செய்யப்பட்டிருந்த போதிலும் மக்களின் எதிர்ப்பால் அந்தப் பணிகள் தடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.