யாழ். தாளையடி கடல்பிரதேசத்தில் உள்ள கடல்நீரை நன்னீராக மாற்றும் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ். தாளையடி கடல்பிரதேசத்தில் உள்ள கடல்நீரை நன்னீராக மாற்றும் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் செயற்படுத்தப்பட்டும் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (02) திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்துக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள அவர் இந்த செயற்திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்த விஜயத்தில் ஜனாதிபதி பல்வேறு அமைப்புகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
யாழ்ப்பாண மக்களுக்கு சிறந்த குடிநீர் விநியோகத்தை வழங்கும் நோக்கோடு கடல் நீரை குடிநீராக்கும் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டது
இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நீர்ப்பாசன மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் விசேட பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் 266 மில்லியன் டொலர்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில். மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, வடக்கு மாகாண ஆளுநர் Bsm சார்ள்ஸ், நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு செயலர் நபீல், நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன் அமைச்சர் காதர் மஸ்தான் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரட்ணாயக்க வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, இராணுவ யாழ் மாவட்ட தளபதி வந்தன விக்குரமசிங்க, வடமராட்சி வடக்கு பிரதேச செயலர், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி, ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதி சக்காவா, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தலைவர், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், நிறுவனத் தலைவர்கள், திணைக்கள தலைவர்கள், உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்களின் பல்வேறு எதிர்ப்புக்களுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பல்வேறு தாமதங்களுக்கு பின்னர் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இதனூடாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி நீர்வழங்கல் வடிகாலமைப்பு பிரிவிற்குட்பட்ட 3 இலட்சம் மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.