காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தினால் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த இறுதிகட்ட பதிவு வவுனியாவில் இடம்பெற்றது.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தினால் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த இறுதிகட்ட பதிவுகள் நேற்று (09) வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளன.
இதன்போது, பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் பிரதானிகள் கலந்து கொண்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் இறுதி கட்டப் பதிவுகளை மேற்கொண்டதோடு விடயங்களையும் கேட்டறிந்திருந்தனர்.
முன்னதாக, 62 பேருக்கு கடிதங்கள், தபால் மூலமாகவும் கிராம சேவையாளர் ஊடாகவும் அனுப்பப்பட்டு இந்த பதிவு நடவடிக்கைகளில் கலந்து கொள்ளுமாறு காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த இறுதிகட்ட பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் ஒருவர், எதிர்வரும் மாதம் அளவில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அவர்களுக்காக நஷ்ட ஈடும், சான்றிதழும் வழங்குவதற்கு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என கூறியிருந்தார்.