ஜப்பானிய தூதுவர் கிளிநொச்சி பளை, முகமாலைப் பகுதிக்குச் சென்று கண்ணி வெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டனர்

2 months ago



இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானிய தூதுவர் அகிஜோ இசோமட்டா, தூதரக அதிகாரிகள், கிளிநொச்சி பளை மற்றும் முகமாலைப் பகுதிக்குச் சென்று கண்ணி வெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டதுடன், கண்ணி வெடி அகற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர்.

இலங்கைக்கான உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானிய தூதுவர் அகிஜோ இசோமட்டா தூதரக அதிகாரிகள் நேற்றுக் காலை பளை மற்றும் முகமாலைப் பகுதிக்குச் சென்று கண்ணி வெடி அகற்றும் நிறுவனப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதுடன் கண்ணிவெடி அகற்றும் பணிகளையும் பார்வையிட்டனர்.

இதன்போது குறித்த பகுதியில் வெடிபொருட்கள் மிக ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும், இந்தப் பகுதியில் மீள்குடியேற்றத்துக்குப் பின்னர் வெடிபொருட்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் கண்ணி வெடி அகற்றும் நிறுவனப் பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர்.

ஜப்பான் நிதிப்பங்களிப்புடன் பளை மற்றும் முகமாலை பகுதியில் டாஸ், ஹலோ ட்ரஸ்ட் மற்றும் சாப் நிறுவனத்தினால் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்