சுஜீவ சேனசிங்கவின் வாகனம் தொடர்பில் ஜே.ஸ்ரீரங்காவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம்
4 months ago

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க பயன்படுத்திய வாகனமொன்று தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்,
"2014ஆம் ஆண்டு எனது வாகன அனுமதிப் பத்திரத்தை வியாபாரிகளுக்குக் கொடுக்கவில்லை.
விபத்துக்குள்ளான எனது வாகனத்தை சுஜீவ சேனசிங்கவுக்கு வழங்கியிருந்தேன்.
2014ஆம் ஆண்டு வழங்கிய வாகனம் தொடர்பில் இன்று என்னை வாக்குமூலம் வழங்குமாறு கேட்டிருந்தனர்.
அதற்காக இன்று வாக்குமூலம் வழங்குவதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குச் சென்று வந்தேன்." - என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
