32 ஆயிரம் மாதிரி வாக்குச் சீட்டுகளுடன் இருவரை அம்பாறை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

2 months ago




32 ஆயிரம் மாதிரி வாக்குச் சீட்டுகளுடன் இருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அரசியல் கட்சி ஒன்றால் அச்சிடப்பட்ட இந்த வாக்குச் சீட்டுகளை வாகனத்தில் எடுத்துச் சென்றபோதே பொலிஸார் கைப்பற்றினர்.

அம்பாறை மாவட்ட தேர்தல் திணைக்கள அதிகாரிகள், பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்தே பொலிஸார் அவற்றைக்                கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட மாதிரி வாக்கு சீட்டில் முஸ்லிம் கட்சி மற்றும் விருப்பு இலக்கமொன்றுக்கும் புள்ளடியிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.

கைதான இரு சந்தேகநபர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சட்டவிரோதமான வாக்குச்சீட்டுக்கள் யாவும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.