கனடாவில் கட்டுப்பாடுகளால் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை குறையும்.

5 months ago


கனடாவில் புலம்பெயர்ந்தோர் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டதால் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை குறைவடையும் என கனேடிய அரசு தெரிவித்துள்ளது.

ஆனாலும் கனேடிய அரசு எதிர்பார்த்ததை விட புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என கனடா வங்கி கருத்து வெளியிட்டுள்ளது.

முன்னதாக, கனடாவில் தற்காலிகமாக வாழும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையை 6.2 சதவீதத்திலிருந்து, 5 சதவிகிதமாக குறைக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாக அந்த நாடு அறிவித்திருந்தது.

எனினும், கனடா வங்கியின் கருத்து கனேடிய அரசாங்கத்தின் கருத்துக்கு முரணாக உள்ளது.

கனேடிய அரசாங்கத்தின் கருத்துக்களுக்கு மாறாக இந்த வருடம் ஏப்ரல் மாத துவக்கத்தில் கனடாவில் தற்காலிகமாக வாழும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 6.8 சதவீதமாக இருந்ததாக கனடா வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், புலம்பெயர்ந்தோர் தொடர்பாக கனேடிய அரசாங்கத்தின் குறிக்கோளை அடைவதற்கு நீண்ட காலம் எடுக்கும் எனவும் கனடா வங்கி தெரிவித்துள்ளது.