உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சனல்4 வீடியோவில் வரும் அதிகாரி யார், அரசு விசாரணை நடத்த வேண்டும் உதயகம்மன்பில வேண்டுகோள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சனல்4 வீடியோவில் மிக முக்கிய அதிகாரி என குறிப்பிடப்படும் நபர் யார் என்பது குறித்து அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சனல் 4இன் வீடியோ குறித்து விசாரணை செய்த விசேட குழுவின் அறிக்கையை இன்று செய்தியாளர் மாநாட்டில் வெளியிட்டவேளை அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
முன்னைய அரசாங்கம் நியமித்த ஒய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் ஐ இமாம் குழுவின் அறிக்கையை உதயகம்மன்பில வெளியிட்டுள்ளார்.
உதயகம்மன்பில மேலும் தெரிவித்துள்ளதாவது
அந்த வீடியோவில் மிக முக்கிய அதிகாரி என குறிப்பிடப்படும் நபர் யார் என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு அரசாங்கத்திற்கு நான் சவால் விடுக்கின்றேன்.
சனல் 4இன் வீடியோவில் புலனாய்வுஅதிகாரிகளையும் இராணுவத்தினரையும் குற்றம்சாட்டும் நபர் தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி என்ற தோற்றத்தை உருவாக்குகின்றார்,
அந்த நபர் தற்போது அரசாங்கத்தில் உயர் பதவி வகிக்கின்றார் -
அரசாங்கம் தேசத்துரோகத்திற்காக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
