யாழ்.பண்டத்தரிப்பு பகுதியில் புதிதாக அமைக்கப்பெற்ற 8 அடிகள் உயரம் கொண்ட சரஸ்வதி சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டது.
3 months ago
பண்டத்தரிப்பு - பல்லசுட்டி பகுதியில் புதிதாக அமைக்கப்பெற்ற 8 அடிகள் உயரம் கொண்ட சரஸ்வதி சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டது.
கதிரமலை யோகேஸ்வரன் என்பவரின் 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில், பல்லசுட்டி காந்தி ஜீ முன்பள்ளி வளாகத்தில் குறித்த சிலை அமைக்கப்பட்டு, நவராத்திரி விரதத்தின் சரஸ்வதிக்கான விரதத்தின் ஆரம்ப நாளான நேற்று உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது விசேட அபிஷேகம் மற்றும் பூசை வழிபாடுகள் என்பன இடம்பெற்றன.
இந்த சிலை கட்டுடை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் பத்மநாதன் என்ற சிற்ப ஆசாரியாரின் கை வண்ணத்தில் அமைக்கப்பட்டது.
திறப்பு விழாவின் பின்னர் விசேட அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது.